Saturday, February 25, 2012

திருவாரூர் காரைக்குடி அகல இரயில் பாதைக்கு நிதி ஒதுக்கீடு.(ரேடியோ செய்தி இணைக்கப் பட்டுள்ளது).







திருவாரூர் காரைக்குடி அகல இரயில் பாதைக்காக முதல்கட்டமாக மத்திய அரசு ரூ 505 கோடி ஒதுக்கியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, நமதூர் பிரமுகர்கள் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களை சந்தித்து இது சம்மந்தமாக கோரிக்கை விடுத்தது நினைவிருக்கலாம்.

அதன் பயனாக மத்திய மந்திரி ப. சிதம்பரத்தின் முயற்ச்சியால் இந்த நிதி - மத்திய இரயில்வே பட்ஜெட்டுக்கு முன்பாகவே- ஒதுக்கப்பட்டிருப்பது - நமதூருக்கு அகல இரயில் பாதைக்காக பெரும் முயற்ச்சி செய்த பெரியோர்களின் இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி எனக்கொள்ளலாம்..

தகவல் : மு.க.செ. அஹமது அலி ஜகபர் அவர்கள்..

9 கருத்துக்கள்:

Ameen Bin Jamal said...

அஸ்ஸலாமு அலைக்கும் , நமது பெரியோர்களின் இடைவிடாத முயற்சியால் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் உதவியால் இரயில்வே பட்ஜெட்டுக்கு முன்பே நமதூர் வழியாக செல்லும் அகல இரயில் பாதைக்கு 505 கோடி நிதி ஒதிக்கி இருப்பது வரவேற்கப்பட வேண்டியதும் , வாழ்த்த வேண்டியதுமான நிகழ்வு.அனைவரின் நீண்ட ஆயுளுக்கு துஆ செய்கிறேன்.ஆமீன்.

naina al-khobar said...

அல்-ஹம்துளில்லாஹ் எல்லா புகழும் இறைவனுகே!

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அல்ஹம்துலில்லாஹ் அனைத்து புகழுக்குரியவன் அல்லாஹ் ஒருவனே..

இம்முயர்ச்சியில் இடுபட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் மேலும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்

அபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர் )) said...

கூடி வாழ்ந்தால் கோடி வளம் பெறலாம் என்பதும் ஒற்றுமையே வெற்றி தரும் என்பதும் நிரூபிக்கப்பட்டிருப்பதால், இதே மாதிரியே நமதூரின் எல்லாப் பிரச்னைகட்கும் “ஒற்றுமை” , “உளத்தூய்மை” மற்றும் “மனோயிச்சை(EGO)யினை விட்டொழித்தல்”ஆகியனவற்றால் தீர்வு கிடைக்கும்.

அபூபக்கர் - அமேஜான் ( மு.செ.மு. ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த அகல ரயில் பாதைக்கு நமதூர் மக்கள் எப்படி ஒத்துழைப்பு தந்து முயற்சி செய்தார்களோ அதைப்போல் எல்லா காரியங்களுக்கும் ஒத்துழைப்பு கொடுத்து நமக்கு கிடைக்க வேண்டியதை கிடைக்க செய்வதற்கு எல்லோரும் முயற்சி செய்யவும்.

இந்த முயற்சி செய்த ப.சிதம்பரம் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

அகல ரயில் பாதைக்கு எல்லோரும் சேர்ந்து எப்படி முயற்சி செய்தீர்களோ அதை அப்போல் எல்லாவற்றிக்கும் சேர்ந்து முயற்சி செய்யுங்கள். எல்லாம் வல்ல இறைவன் நம்மலுடைய முயற்சிக்கு நல்லுதவி செய்வானாவும் ஆமீன்.

தலைத்தனையன் said...

Alhamdulillaah. Almost we lost our hope. Long waited benevolent issue. May Allah benefit the ones stood together for this cause.

S.O.M.Hussain said...

திருவாளர் அபுல்கலாம் காக்கா அவர்கள் நல்ல தமிழ் எழுதுவோம் பாணியில் தங்களின் பின்னூட்டத்தை ஒரு முறைக்கு மறுமுறை படித்துப்பார்த்து பொருள் பிழை படாமல் திருத்திக்கொண்டால் நலம் கவிஞரே.
செ.ஒ.மு.ஹுசைன்

அஹ்மத் ஃபிர்தௌஸ் said...

இது சம்பந்தமாக பிரபல நாளிதழ்களில் எதேனும் செய்தி வந்துள்ளதா? தெரியப்படுத்தினால் நலம். இன்னும் இரயில்வே பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமலிருக்கும் போது, இந்த நிதி ஒதிக்கீடு பற்றிய செய்தியின் நம்பகத்தண்மை இன்னும் விரிவாக விளக்கப்படவேண்டும் என்பது என் எண்ணம்.

JAFAR said...

சகோ. அஹமது ஃபிர்தெளஸ், செய்தியின் தொடக்கத்தில் உள்ள ஆல் இந்தியோ ரேடியோ வானொலியில் சொன்ன செய்தியின் ஒலி உள்ளதே! அதை கேளுங்கள் அதில் விவரமாக் சொல்லப் பட்டுள்ளது.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!

அதிரை எக்ஸ்பிரஸ்

 
"SC"