Sunday, February 26, 2012

மின்வெட்டால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்கள் : அரசு ஏற்பாடு !


மின்வெட்டு காரணமாக அரசு பொதுத்தேர்வு எழுத மாணவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருக்க பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்களை வாடகைக்கு பெற்று வழங்க அரசு முடிவுசெய்துள்ளது. ஜெனரேட்டர்களை இயக்குவதற்கான டீசல் உள்ளிட்ட அனைத்து செலவையும் அரசே ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டு காரணமாக, பொதுத் தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதால், அரசு உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளுக்கு மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், அவ்வாறு இயலாத சூழ்நிலையில், மின்வெட்டு உள்ள நேரங்களிலும், தொடர்ந்து மின்சாரம் கிடைக்கும் வகையில், அரசே ஜெனரேட்டர்களை வாடகைக்கு  பெற்று வழங்கும்.  ஜெனரேட்டர்களை இயக்குவதற்கான டீசல் உட்பட அனைத்துச் செலவையும் அரசே ஏற்கும்.

இதே போன்று அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள், ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து இயக்கிக் கொள்ளலாம். அதற்கு ஏற்படும் கூடுதல் செலவினை அரசு அவர்களுக்கு ஈடு செய்யும்.  

6 கருத்துக்கள்:

Abdul Razik said...

Will the Government provide power generator before Annual exam? If so,it will be really grateful.

Ahamed ibrahim said...

ஜெனரேட்டர்களை வாடகைக்கு பெற்று வழங்க அரசு முடிவுசெய்துள்ளது. ஆனால் மின் வெட்டுக்கு தீர்வு...?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

Good action if it is provided in time. Otherwise better to buy electricity carefully (without any corruption or scandle on it) from neighbour states which are already sufficient for their state and surplus in the production of power to provide other states who is in scarcity (badly needed)in the subject matter like our Tamilnadu.

Due to the both sides (supporting & opposition) protests against Kudangulam Atomic Power Plant, we are unable to realize and recongnize the real advantages and disadvantages of this plant after started it's production. I mean to say that confusion in the people opinions.

So, we have to go back to the era of "அரிக்களாம்பு, முட்டளாம்பு" soon it seems.......

MSM Naina Mohamed.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

The solution for the power-cut could be to go back the era of "அரிக்களாம்பு, முட்டளாம்பு, விசிறி" in the worst case if the protest prolongs against Kudangulam Atomic Power Plant....

This is not for joke, nowadays the emotional expressions coming from most of the people in our state.

அரசின் அநாவசிய சலுகைகளும், இலவசங்களும் to be stopped immediately and the money to be diverted fully to the electricity prodution for the state's requirements/demands as a war time. This is what every one in the state expecting mentally, psychically, directly and indirectily.

லெ.மு.செ.அபுபக்கர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஒவ்வொரு வீடுகளுக்கும் ஜெனரேட்டர்,டீசல்,பெட்ரோல் கொடுத்தால்.
மாணவர்கள் பாதிப்பு இல்லாமல் நன்றாக படித்து மனனம் செய்து நல்லமுறையில் தேர்வு எழுத வசதியாக இருக்கும் .

சேக்கனா M. நிஜாம் said...

// ஒவ்வொரு வீடுகளுக்கும் ஜெனரேட்டர்,டீசல்,பெட்ரோல் கொடுத்தால்.
மாணவர்கள் பாதிப்பு இல்லாமல் நன்றாக படித்து மனனம் செய்து நல்லமுறையில் தேர்வு எழுத வசதியாக இருக்கும் .//

எதிர் காலத்தில் தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு “ஜெனரேட்டர்” இலவசம் என அறிவிப்பு அரசியல்வாதிகளிடமிருந்து வந்தாலும் வரும் !

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!

அதிரை எக்ஸ்பிரஸ்

 
"SC"