மரைக்காயர் குளம் மேடு அருகில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பூங்கா

நமதூர் மேலத்தெரு வடபுறம் - மரைக்காயர் குளம் மேடு அருகில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பூங்கா சில நாட்களாகச் செயல்பட்டு வருகிறது.

குழந்தைகள் விளையாடுவதற்கான ஊஞ்சல்கள், ஏறி இறங்கும் சறுக்கை மற்றும் சில பொழுதுபோக்கு விளையாட்டுக்களுக்கான சாதனங்கள் பொருத்தப்பட்டு, சுற்றிலும் முள்கம்பிகளால் பாதுகாப்புச் சுவர் அமைக்கப்பட்டு, மரைக்காயர் குளத்தருகில் குளுகுளு இயற்கைச் சூழலை ரசிக்கும்படியாக சிமென்ட் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

முன்பு திறந்தவெளி கழிப்பிடமாக இருந்த இடத்தை சமப்படுத்தி, சுத்தம் செய்ததோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதி உதவியோடு கழிப்பிடமும் அமைக்கப்பட்டுள்ளது.

சாதாரண நாட்களில் குழந்தைகளுக்கான பூங்காவாகப் பயன்படுத்துவும் பெருநாள் தினங்களில் பெருநாள் தொழுகைக்கும் இப்பகுதியை பயன்படுத்தும் திட்டம் இருப்பதாக இப்பகுதிவாசி ஒருவர் தெரிவித்தார்.சுற்றுச்சூழலுக்கு கேடாக இருந்த பகுதியை ஊர்மக்களின் பொதுநலனுக்கு ஏற்ப செம்மைபடுத்த உதவியவர்களை இவ்விசயத்தில் பாராட்டியே ஆக வேண்டும்.

இலட்சங்களில் வீட்டுமணைகள் விலை ஏறிவிட்ட போதிலும் அப்பகுதியில் ஓர் பூங்கா அவசியம் என்பதை உணர்ந்து, அதற்கான முயற்சிகளைச் செய்தவர்கள் பாராட்டுக்குறியவர்கள்.

உள்ளூரில் இருப்பவர்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பொடிநடையாய் நடந்து, தங்கள் கருத்துக்களைப் பதியலாமே!
Share:

12 comments:

 1. அப்படியா? பூங்காவா? நம்பவே முடியலங்க... இது போல அனைத்து பகுதிகளிலும் அமைச்சா நல்லா ஈக்கிம்.. பொன்டுவோ போய் பொழுது போக்க வசதி செஞ்சி தாங்க.

  ReplyDelete
 2. சொல்ல மறந்தது! பொதுக்கழிப்பிடம் இன்னும் திறக்கப்படாத காரணத்தினாலோ என்னவோ சிலர் பூங்கா அருகேயுள்ள குட்டையருகே கழிப்பிடமாகப் பயன்படுத்துவதைக் காணமுடிந்தது.

  பலரின் நல்ல நோக்கத்தில் உருவாகியுள்ள இந்த பூங்காவின் சுற்றுச்சூழல் கெடாமல், விரும்பி வருபவர்களுக்கு சங்கடம் ஏற்படாமலிருக்க அக்கம்பக்கம் வசிப்போர் இவ்விசயத்தில் கூடுதல் அக்கரை எடுக்க வேண்டும்.

  தவறும் பட்சத்தில் உன்னதமான முயற்சிகள் விழலுக்கு இரைத்த நீர்போல் வீணாகக்கூடும்.

  ReplyDelete
 3. நல்ல விஷயம்தான் இதை பராமரிக்க ஆட்க்கள் யாரும் நியமிக்க படவில்லை என்றால் உடனடியாக இரவு நேர கண்கானிப்பிற்க்கு ஆள் நியமிக்க வேண்டும் ஒதுங்குபுறமாக இருப்பதால் கவனம் தேவை.

  ReplyDelete
 4. ஆஹா..... நம்மூருல ஒரு பூங்காவா தகவலுக்கு நன்றி அதிரைகாரரே.

  ReplyDelete
 5. Masha Allah, Really I have appreciated your work and it’s too beautiful and useable our communities and our city people.

  Thanks Brother's………….

  ReplyDelete
 6. விடுமுறையில் ஊர்வந்திருந்த எனக்கு நமதூரின் பல பகுதிகளுக்கும் குறிப்பாக மஸ்ஜிதுகளுக்குச் செல்வதில் ஏற்பட்ட ஆர்வத்தில் நான் கண்டு, மனதார பாராட்ட விரும்பியே இதைப் பதிவாக இட்டேன். உண்மையில் இந்தப் பூங்காவை உண்டாக்கியவர்கள்,அதன் பின்னணியிலிருந்து செயல்பட்டவர்கள் குறித்து முழு விபரமும் தெரியாது. நான் அங்கிருந்தபோது குழந்தைகளுடன் வந்த சில தாய்மார்களின் வாய்மொழியாகக் கேட்டதிலிருந்தே சில தகவல்களை பகிர்ந்து கொண்டேன்.

  பதிவிட்ட பிறகு என்னை தொலைபேசியில் அழைத்த மேலத்தெரு நண்பர்கள் சிலர், இந்த பூங்காவை உருவாக்கியதில் யூ.ஏ.இ.,சவூதி மற்றும் லன்டன்வாழ் மேலத்தெரு இளைஞர்களே முழுக்க முழுக்க காரணம் என்று தெரிவித்ததன் அடிப்படையில் தகவலை திருத்தம் செய்துள்ளேன்.

  சகோ.ஜமாலுதீன் அவர்கள் இந்த பூங்கா குறித்த முழுவிபரத்தையும் அனுப்புவதாகச் சொல்லியுள்ளார். அதையும் (தேவையெனில்) பகிர்ந்து கொள்வேன்.

  பிழையை நட்புடன் சுட்டிய சகோதரர்களுக்கும், இப்பதிவில் ஆர்வமாக கருத்திட்ட அன்பர்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 7. சூப்ப‌ர்..ந‌ல்ல‌ விஷ‌ய‌ம்..

  ReplyDelete
 8. இது போல அனைத்து பகுதிகளிலும் அமைச்சா நல்லா ஈக்கிம்.

  ReplyDelete
 9. அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகத்திற்கு,
  மேற்கண்ட செய்தியை வெளியிட்டமைக்கு நன்றியை தெரிவிக்கும் அதே வேளையில் அதிலுள்ள கீழ்க்கண்ட செய்தி முற்றிலும் தவறானது என்பதை தெரிவித்துக் கொள்வதுடன் குறிப்பிட்ட இச்செய்தியை மட்டும் தளத்திலிருந்து நீக்குவதோடு மட்டுமல்லாமல் தவறாக செய்தி வெளியிட்டமைக்கு அதிரை எக்ஸ்பிரஸ் வருத்தம் தெரிவிக்க கோருகிறோம்.

  *****/---- அதிரை எக்ஸ்பிரஸ் வெளியிட்ட தவறான செய்தி ***
  சுற்றுச்சூழலுக்கு கேடாக இருந்த பகுதியை ஊர்மக்களின் பொதுநலனுக்கு ஏற்ப செம்மைபடுத்திய பேரூராட்சி மற்றும் வார்டு மெம்பரை இவ்விசயத்தில் பாராட்டியே ஆக வேண்டும்.
  *******/-----

  காரணம் இப்பூங்கா அமைவதற்கு மேலத்தெருவாசிகளின் பொருளாதார உதவி (உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ்) மற்றும் தன்னலமற்ற பொதுச்சேவை தான். இதில் பேரூராட்சி மற்றும் வார்டு உறுப்பினர்களின் பங்களிப்பு எள்ளளவு இல்லை என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.

  ReplyDelete
 10. வரவேற்க்கக்கூடிய விசயம், இதற்காக பாடுபட்ட அனைத்து சகோதரர்களுக்கும் என் வாழ்த்துக்கள்..! இதை செவ்வனே செம்மைபடுத்த (maintenance) இதற்கான அக்கரையுள்ள சகோதரர்கள்/சகோதரிகள் ஒத்துழைத்தால் நிச்சயம் இந்த வெற்றி மேலும் நமதூ ஏரியா வாரியாக பெண்கள்/குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சம் ஏற்படுத்த ஏதுவாக இருக்கும்

  ReplyDelete
 11. சகோ.அதிரையன்,

  பிழை ஏற்கனவே சரிசெய்யப்பட்டு திருத்தப்பட்டுள்ளது. பதிவிட்டவன் என்ற முறையில் இதற்கான விளக்கத்தையும் பின்னூட்டத்தில் தெரிவித்துள்ளேன்.
  வஸ்ஸலாம்.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது