2009-07-05

அதிரை பிரமுகர்களின் முயற்சியும் ரயில்வே பட்ஜெட்டும்

காரைக்குடியிலிருந்து சென்னைக்கு அதிராம்பட்டினம் வழியாக சென்றுவந்த கம்பன் எக்ஸ்ப்ரஸ் ரயில் கடந்த நான்காண்டுகளாக அகல ரயில்பாதை விரிவாக்கம் காரணமாக தடைபட்டுள்ளது.ஒவ்வொரு வருடமும் ரயில்வே பட்ஜெட்டில் இழுத்தடிக்கப்பட்டு ஒருவழியாக திருத்துரைப்பூண்டி- சென்னை வரையிலான அகலரயில்பாதை செயல்பட்டு வருகிறது.


காரைக்குடி-திருத்துறைப்பூண்டி இருப்பாதை முழுமையாகும்வரை அதிரை-சென்னை நேரடி ரயில் போக்குவரத்துச் சாத்தியப்படாமலோ அல்லது சேது நெடுஞ்சாலையைக் காரணம் காட்டி சாலைப்போக்குவரத்து வசதியில்லாத பிறநகரங்களுக்கோ சென்றவருட பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்த நமதுபணம் திருப்பி விடப்படக்கூடும்!




இருநூற்றாண்றாண்டுகளாக வணிகப்போக்குவரத்திற்குப் பயன்பட்டுவந்த நமதூர் வழித்தடம் கடல் அரிப்பு, சுனாமிக்குப் பிந்தைய கடல்மட்ட உயர்வு, நமதூர் ரயில் போக்குவரத்துத் தேவையை சட்ட/பாராளுமன்ற அவைகளில் எதிரொலிக்காத உறுப்பினர்கள் போன்ற காரணங்களால் அதிரை-சென்னை ரயில்வே வழித்தடம் கனவாகிப்போகும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில் அதிரை மற்றும் முத்துப்பேட்டையைச் சார்ந்த பிரமுகர்கள் மத்திய அமைச்சர் E.அஹமது அவர்களைச் சந்தித்து நமதூருக்கான ரயில் தேவையையும், அதிரை-சென்னை வணிகப்போக்குவரத்தின் வரலாற்றுத் தொன்மைகளைச் சுட்டிக்காட்டியும்,பெண்பயணிகளின் நெடுந்தூரப் பயணம் காரணமாக கால்வீக்கம், உபாதைகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அதிரை-திருத்துறைத்துறைப்பூண்டி அகல ரயில்பாதை வேலைகளை துரிதப் படுத்த இவ்வருட ரயில்வே பட்ஜெட்டில் சேர்க்கும்படி அமைச்சரிடம் எடுத்துக்கூறியதை அதிரை எக்ஸ்ப்ரஸ் நன்றியுடன் வாழ்த்துகிறது.

நமது சகோதர வலைப்பதிவான அதிரைபோஸ்டில் மத்திய அமைச்சரை நமதூர் பிரமுகர்கள் சந்திந்ததன் பின்னனி சொந்த வர்த்தகநோக்கமே என்று அதிரையன் என்பவரால் எழுதப்பட்டுள்ளதை உரிமையுடன் கண்டிக்கிறோம். பிஸியான தொழிலதிபர்களான இப்பிரமுகர்கள் அதிரை மட்டுமின்றி அக்கம் பக்க ஊர்களையும் கருத்தில் கொண்டு தங்களது பொன்னான நேரத்தைச் தியாகம்செய்து மத்திய அமைச்சரிடம் கோரிக்கையை எடுத்துச் சொன்னது நிச்சயம் பாராட்டுதலுக்குறியது.

போலி வாக்குறுதிகளை அள்ளிவீசி வாக்குகளை அள்ளிச்சென்ற அரசியல்வாதிகள் செய்திருக்க வேண்டியதை தொழிலதிபர்களாக இருந்தாலும் நமது ஊரின் நலத்தைக் கருத்திகொண்டு நன்முயற்சி செய்துள்ளதை தயவு செய்து கொச்சைப்படுத்த வேண்டாம்.

வாழ்த்த மனமில்லா விட்டாலும் தவறானஉள்நோக்கம் கற்பிப்பது நமதூரின் கொஞ்சநஞ்ச நலவிரும்பிகளின் சேவைமனப்பான்மையைக் குறைக்கும் என்பதை நினைவுறுத்துகிறோம். பலரும் வாசித்துச் செல்லும்தளங்களில் எழுதும்போது மிகப்பொறுப்புடன் எழுதவேண்டும் பொதுத்தளத்தங்களில் எழுதப்படும் ஆக்கங்கள், எதிர்கால இணையஆவணங்களாகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்பதை நட்புடன் (கு)சுட்டுகிறோம்!

அடுத்து,நமதூரிலிருந்து சென்னைக்குச் சென்றுவந்த கம்பன் எக்ஸ்ப்ரஸ் மீண்டும் கிடப்பதற்குச் செய்யவேண்டிய/செய்திருக்க வேண்டிய அரசியல் சடங்குகள் குறித்து பிறகு பார்ப்போம்....!

தொடரும்....

15 comments:

அதிரைpost July 5, 2009 2:22 PM  

அதிரை எக்ஸ்பிரஸுக்கு, எமது கட்டுரையை முழுமையாக படிக்காமல் எழுதப்பட்ட கட்டுரை என்பதை முதல் வாசிப்பிலேயே அறிந்துக்கொள்ள முடியும்! ஆனால்.....


//நமது சகோதர வலைப்பதிவான அதிரைபோஸ்டில் மத்திய அமைச்சரை நமதூர் பிரமுகர்கள் சந்திந்ததன் பின்னனி சொந்த வர்த்தகநோக்கமே என்று அதிரையன் என்பவரால் எழுதப்பட்டுள்ளதை உரிமையுடன் கண்டிக்கிறோம்...//என எக்ஸ்பிரஸ் எழுதியுள்ளது ...



ஆனால்,
அதிரை போஸ்ட் அதிரையின் தவப்புதல்வர்களின் சேவையை-முயற்சியை சிலர் கொச்சைப்படுத்தி தீய நேக்கத்தோடு வதந்"தீ" பரப்பிவருவதை கண்டித்துள்ளோம்!

அதை படிக்கவும்....


//அதே நேரத்தில் "மத்திய அமைச்சரை தங்களது வியாபார விசயமாகத்தான் சந்தித்தார்கள்;ஆனால்,இரையில்வேயை காரணம் காட்டிவிட்டார்கள்..."

என சிலர் வதந்"தீ"யை பரப்பி வருவதை வன்மையாக கண்டிக்கிறோம்!


ஊருக்கு நல்லது செய்தால் குறை சொல்ல ஆட்கள் இருக்கவே செய்கிறார்கள்...,
அதை பொருட்படுத்தாது உங்கள் சேவையை தொடர வேண்டும்...!//

முழுமையாக வாசிக்க....

http://adiraipost.blogspot.com/2009/07/blog-post_04.html

**********************************

இதில் எங்கிருந்து அதிரை எக்ஸ்பிரஸ் குறை கண்டது....?
விடைத்தெரியாத வினாக்களாக .....

Jamal,  July 5, 2009 5:26 PM  

சிலருக்கு கூடு கட்டத்தெரியாது, கட்டிய கூட்டை பிய்த்து எறியத்தான் தெரியும்.இதில் அதிரையன் போன்றோர் விதிவிலக்கல்ல.ஊர் நலனுக்கு நேரத்தை ஒதுக்கி பாடுபடும் இவர்களை கொச்சைபடுத்தி பார்ப்பவர்கள் நிச்சயமாக இவர்கள் ஊரில் பித்னாவை குலத்தொழிலாக நடத்துபவர்கள்தான் சந்தேகமேயில்லை.அதிரை போஸ்ட்டும் சுய விளம்பரத்திற்க்காக எவனோ சொன்னதை அடிக்கோடிட்டு காட்டியிருக்க் வேண்டிய அவசியமும் இல்லை. எவனோ பொறாமையிலும் த குடும்பத்தார் போட்டோ இதில் இல்லையே என்ற வெறுப்பில் எதையாவது ஊளருவான்.இவன் போன்ற விஷமிகளால் ஊருக்கு நல்லது நடக்கவிட்டாலும் கெட்டது நடக்கும். அதிரையன் யார் என்று எங்களுக்கு தெரியும். அவன் ஒரு ஹராமி

அதிரையான்,  July 5, 2009 10:28 PM  

அதிரை போஸ்ட் சகோதரர்கள் தயவு செய்து அல்லாஹ்வுக்காக தங்களைத் திருத்திக்கொள்ள முன்வரவேண்டும்.

தங்களது தளத்தில் சம்பந்த பட்ட நமதூர் சகோதரர்களை தாக்கி எழுதிவிட்டு, பின்னர் அதை அப்படியே தங்களது தளத்திலிருந்து எடிட் செய்துவிட்டு 'அதிரை எக்ஸ்பரஸில் குற்றம் சாட்டப்படுவது போல் அப்படி எங்குமே எழுதவில்லையே!' என்று அப்பாவித்தனமாக பின்னூட்டமிடும் அளவுக்கு உங்களது தரத்தை நீங்களே தாழ்த்திக்கொண்டு செல்வீர்கள் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அல்லாஹ்வுக்கு பயந்து அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுங்கள், உங்கள் அதிரை போஸ்டில் அப்படி குற்றம் சாட்டி எழுதப்பட்டு, பின்னா அதிரை எக்ஸ்பரஸின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டதும் அதை அப்படியே எடிட் செய்தீர்களா? இல்லையா? இல்லை என்று மறுத்தீர்களேயானால் நீங்கள் எழுதியதற்கான ஆதாரங்களை இதே அதிரை எக்ஸ்பரஸின் மூலம் ஆதாரத்தோடு எம்மால் சமர்ப்பிக்க முடியும்?

இப்படி தங்களது தளத்தில் எடிட் செய்துவிட்டு அமைதியாக இருந்திருந்தாலும் மன்னித்து விடலாம். ஆனால், தாங்கள் எழுதியதை எடிட் செய்ததுடன், அப்படி எங்குமே எழுதவில்லையே என்று சொல்லும் அளவுக்கு பச்சைப் பொய்யை உங்களது பின்னூட்டத்தின் மூலம் அரங்கேற்றுவது ஏன்? அதிரை போஸ்ட்டை நடத்தும் சகோதரர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும், இது போன்று அதிரை எக்ஸ்ப்ரஸை குற்றம் சுமத்துவதற்காக ஒரு அபாண்டமான பொய்யை அரங்கேற்றுவது தான் பத்திரிக்கை தர்மமோ? அல்லது எழுத்தாளர்களின் லட்சனமா?

ஆதிரை போஸ்டை நடத்தும் சகோதரர்கள் தாங்கள் செய்த செயலை ஒத்துக்கொண்டு அதற்காக மண்ணிப்புக் கேட்காவிட்டால், அதிரை எக்ஸ்ப்ரஸை நடத்துவது யார்? அந்த குற்றம் சாட்டப்பட்ட கட்டுரையை எழுதிய அதிரையான் என்பவர் யார்? அவர் எங்கிருந்து அந்த கட்டுரையை எழுதினார்? யார் அந்தக் கட்டுரையை தங்களுக்கு சாதகமாக எடிட் செய்தார்? என்பதை ஆதாரத்துடன் வெளியிட வேண்டிவரும் என்று எச்சரிக்கின்றேன்.

உங்கள் பதிலை எதிர்பார்த்தவனாக

அதிரையான்

Anonymous,  July 6, 2009 12:20 AM  

நல்லதும் சையமாட்டீக நல்லது சைறவகள விடவும் மாட்டீகா ரொம்ப நல்ல மனசு பா

அதிரை எக்ஸ்பிரஸ் July 6, 2009 1:50 AM  

மத்திய அமைச்சருடன் அதிரைப் பிரமுகர்கள் சந்திப்பு ஏன்? புதிய தகவல்! என்ற தலைப்பிட்டு விட்டு இறுதியில் வதந்தீ பரப்புவோரைக் கண்டிப்பதாகச் சொல்வது பொருத்தமாக இல்லை என்ற காரணத்தினாலேயே அதிரை போஸ்டின் முரன்பாட்டை உரிமையுடன் சுட்டிக்காட்டினோம்.

வதந்தீ பரப்புவோரைக் கண்டிக்கும் நோக்கில் பதிவிட்டிருந்தால் குறைந்த பட்சம் தலைப்பையாவது கண்டிக்கும் தொனியில் இட்டிருக்கலாம்.

தலைப்பில் 'புதிய தகவல்' என்றும் சொல்லியிருப்பதால் கண்டனத்திற்கு உரிய வதந்தீதான் புதிய தகவலோ என்ற ஐயமெழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நட்புடன்,
அதிரை எக்ஸ்ப்ரஸ்

அதிரைpost July 6, 2009 3:38 AM  

அதிரையான் said...

//தங்களது தளத்தில் சம்பந்த பட்ட நமதூர் சகோதரர்களை தாக்கி எழுதிவிட்டு, பின்னர் அதை அப்படியே தங்களது தளத்திலிருந்து எடிட் செய்துவிட்டு 'அதிரை எக்ஸ்பரஸில் குற்றம் சாட்டப்படுவது போல் அப்படி எங்குமே எழுதவில்லையே!'


என்று அப்பாவித்தனமாக பின்னூட்டமிடும் அளவுக்கு உங்களது தரத்தை நீங்களே தாழ்த்திக்கொண்டு செல்வீர்கள் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.


அல்லாஹ்வுக்கு பயந்து அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுங்கள்,...//


1)அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் கூறுவதுப்போல் எடிட் செய்யவில்லை!

2)அதிரை சகோதரர்களை தாக்கி எழுதினேன்; அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை போஸ்ட் மீது குற்றம் சாட்டிய பின்பு பின்பே எடிட் செய்தேன் என்பது உங்கள் குற்றச்சாட்டு!

இப்போது என்(அதிரையான்) குற்றச்சாட்டு உண்மையே!
என நீங்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யத்தயாரா?

(உங்கள் குற்றச்சாட்டு 100 சதம் பொய்! என்பதற்கு அல்லாஹ் ஒருவனே சாட்சி!!)



//உங்கள் அதிரை போஸ்டில் அப்படி குற்றம் சாட்டி எழுதப்பட்டு, பின்னா அதிரை எக்ஸ்பரஸின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டதும் அதை அப்படியே எடிட் செய்தீர்களா? இல்லையா? இல்லை என்று மறுத்தீர்களேயானால் நீங்கள் எழுதியதற்கான ஆதாரங்களை இதே அதிரை எக்ஸ்பரஸின் மூலம் ஆதாரத்தோடு எம்மால் சமர்ப்பிக்க முடியும்?//

3)என்பது அதிரையானின் சவால்...!

உங்கள் கூற்றில் நீங்கள் உண்மையாக இருந்தால்....
தாராளமாக....நிரூபனம் செய்யலாமே....?
அப்படி நீங்கள் நிரூபனம் செய்யாவிட்டால்....?

அதிரைpost July 6, 2009 4:22 AM  

அதிரை எக்ஸ்பிரஸ் said...

//தலைப்பில் 'புதிய தகவல்' என்றும் சொல்லியிருப்பதால் கண்டனத்திற்கு உரிய வதந்தீதான் புதிய தகவலோ என்ற ஐயமெழுவதைத் தவிர்க்க முடியவில்லை.//

1)உங்களுக்கு ஐயமெழுவதற்கு தலைப்பை மட்டும்தான் படித்து (நட்புடன்) அதிரை போஸ்டை கண்டித்தீர்களா?


தலைப்பை மட்டும்தான் எவரும் படிப்பார்களா...?


செய்தியையும் படிப்பார்கள் என்பதை ஒப்புக்கொண்டால்....
ஏன் (உரிமையுடன்) கண்டிக்க வேண்டும்...?


செய்தி படித்தால் தான் உன்மை தெரியுமே...?


உண்மை இப்படி இருக்கையில், அதிரை போஸ்ட் செய்தியை தவறான அர்த்தம் கொடுக்க வேண்டும்...?

//தலைப்பில் 'புதிய தகவல்' என்றும் சொல்லியிருப்பதால் கண்டனத்திற்கு உரிய வதந்தீதான் புதிய தகவலோ//

2)இதை சற்று நிதானத்துடன் யோசித்திருக்கவேண்டும்...அதிரை எக்ஸ்பிரஸ்

3ம்தேதியை மையப்படுத்தி பார்க்க வேண்டும்;

//ஜுலை 3ம் தேதி ரயில்வே பட்ஜெட் வர இருப்பதால் அதில் இத்திட்டத்தை சேர்க்க பலவகையில் முயற்சிகள் நடந்த வண்ணமாக இருக்கிறது.(2ம் தேதி அதிரை எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தி)//

பழைய செய்தி-தகவல்!


//ஜுலை 3ம் தேதி ரயில்வே பட்ஜெட் டில்சேர்க்க எடுக்கப்பட்ட முயற்சி பயன் தரவில்லை என்றாலும்..(4ம் தேதி அதிரை போஸ்ட் வெளியிட்ட செய்தி!)//

இது புது செய்தி-தகவல்!

அந்த வகையில் "மத்திய அமைச்சருடன் அதிரைப் பிரமுகர்கள் சந்திப்பு ஏன்? புதிய தகவல்!"

என்ற தலைப்பு சரியே!!!


3)//வதந்தீ பரப்புவோரைக் கண்டிக்கும் நோக்கில் பதிவிட்டிருந்தால் குறைந்த பட்சம் தலைப்பையாவது கண்டிக்கும் தொனியில் இட்டிருக்கலாம்.//

புதிதாக ஒரு செய்தியை அறிமுகப்படுத்துவதை விடவும், ஏற்கனவே மக்கள் அறிந்த செய்தியை,தலைப்பை இட்டு எழுதுவது இதழியலில் இயல்புதான்!


4)//அதிரை போஸ்டின் முரன்பாட்டை உரிமையுடன் சுட்டிக்காட்டினோம்.//

சுட்டிக்காட்ட வில்லை!

தவறான புரிதலை ஏற்படுத்தி விட்டீர்கள் என்பதுதான் உண்மை!

mohamed thasthageer,  July 6, 2009 6:00 AM  

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).தலைப்பை மாத்திரம் பார்த்துவிட்டு தலையில் குட்டியதால் தலை கிருத்துப்போய் உள்ளனர் நமது சகோதரர்கள்,இனி வரும் காலம் நுனிப்புல் மேயாமல் முழுதும் படித்து கருத்திட்டால் நமக்குள் வீன்குழப்பம் தவிற்கப்படும் என்பது என் கருத்து( நீண்ட நாளுக்குப்பின் தலை காட்டிருக்கிறேன்)

Khaleed Adirai,  July 6, 2009 1:00 PM  

அஸ்ஸலாமு அலைக்கும்... அதிரைக்கு அகலரயில் பாதை வருவதற்க்கு இன்றுவரை தனது இயலாமையை கூட பொருட்படுத்தாமல் தினமும் இதேவேலையில் இருக்கும் சகோதரர் எம்கேஎஸ் அஹமது அலி ஜாபர் அவர்களுக்கு ஒரு அழைப்புகூட கொடுக்காமல் பெரும் செல்வ்ந்தர்கள் மட்டும் தனியாக சென்று மத்திய அமைச்சரை பார்த்ததின் நோக்கம் என்ன? இவர்கள் உண்மையிலேயே ரயில் சம்பந்தமாகத்தான் சந்தித்தார்கள் என்றால் ஜாபர் அவர்களை அழைக்காமல் சென்றது ஏன்? இதற்க்கு விளக்கம் தரவில்லை என்றால் அதிரை போஸ்ட் எழுதியதில் உண்மையிருக்கிறது என்பது ஊர்ஜீதப்படுத்தபடும். செய்யுமா அதிரைஎக்ஸ்பிரஸ்?

ABDUL RAZAK/chasecomthehindu@gmail.com,  July 7, 2009 4:38 PM  

ALLAH KNOWS OUR FOOT STEP. DO NOT WRITE UN AUTHENTICATED INFORMATION ON ADIRAIXPRESS.WE BELIVE IN ALLAH, ALL ACTS ARE ACCOUNTABLE. SWEAR IN ALLAH, OUR INTENTION TO MEET RAILWAY MINISTER TO RQST BG

Abu_Hasan,  July 7, 2009 5:02 PM  

நம் ஊரில் வசதி படைத்தவர்கள் பலர் இருந்தும், ஒரு சிலர் மட்டும் சிரமம் எடுத்து மத்திய ரயில்வே துறை இணை அமைச்சரை சந்தித்து நமதூருக்கு அகல ரயில் பாதையை விரைந்து முடிக்கக் கோரி நேரில் விண்ணப்பம் கொடுத்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. நமது மாநிலத்திற்கு மட்டுமல்ல நாட்டிற்கே வருமானம் தரக்கூடிய அருமையான திட்டமான அந்த சேது சமுத்திரத்திட்டத்தை எதிர்க்கட்சிகள் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பது போல் இந்த நல்ல முயற்சியை யாரும் கொச்சைப்படுத்தி விடாதீர்கள். அமைச்சரிடம் நேரில் மனு கொடுத்து விட்டு ஊர் திரும்பும் வழியில் ஒரு நல்ல ஹோட்டலில் அவர்கள் சென்று அவர்களின் சொந்த பணத்தில் பிரியாணி சாப்பிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதையும் நீங்கள் கொச்சைப்படுத்தி விடுவீர்களா? " எந்த ஒரு நல்ல காரியமும் செய்யமாட்டான்; செய்றவனையும் விடமாட்டான்". என்ற அவப்பெயரை மட்டும் பெற முயற்சிக்காதீர். இந்த ஊருக்கு எது நல்லது செஞ்சாலும் மக்கள் எதையாவது குறையும், புறமும் சொல்லிக்கொண்டு திரிவார்கள். எதற்கப்பா வம்பு? நம்ம உண்டு நம்ம வேலெ உண்டுன்னு சும்மா இருக்க வேண்டியது தான் என்ற மனநிலையை நம் சமூக ஆர்வலர்களிடம் ஏற்படுத்தி அவர்களை அசர வைத்து விடாதீர்கள்.

Abu Easa,  July 7, 2009 6:14 PM  

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

"எவருடைய ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காக இருக்கிறதோ அவர் அல்லாஹ்வை அடைந்துகொள்வார். மேலும் எவருடைய ஹிஜ்ரத் பெண்ணுக்காக இருக்கிறதோ அவர் அந்த பெண்ணையே அடைந்துகொள்வார்" - அல் புகாரி

இது சஹீஹ் புகாரியில் முதல் ஹதீஸாக பதியப்பட்டிருக்கிறது. இதன் கருத்து "ஒரு காரியம் என்ன நோக்கத்திற்காக செய்யப்படுகிறதோ அதற்கான பலனே அவர்களுக்கு கிடைக்கும்"

ரயில்வே மந்திரியுடனான சந்திப்பு "சமுதாய நலன் நாடி" செய்யப்பட்டிருந்தால் அதற்கான கூலி அவர்களுக்கு அல்லாஹ்-விடத்தில் இருக்கிறது. மேலும் அந்த சந்திப்பு "தொழில் மேம்பாடு" சம்மந்தமாக இருந்தால் அதை அவர்கள் அடைந்துகொள்வார்கள். அல்லாஹ் உள்ளத்தில் மறைத்து வைத்திருப்பதையும் நன்கு அறிகிறான்.

இதில் உங்களுக்கு என்ன வந்தது? அவர்கள் எதற்காக சந்தித்தாலும் உங்களுக்கென்ன? உங்களிடம் பயனப்படி அல்லது கூலி ஏதும் கேட்டார்களா?

அதிரை எக்ஸ்பிரஸ் போன்ற பொதுத் தளங்களெல்லாம் தகவல் அறிந்துகொள்வதற்காகத் தானே தவிர நீங்கள் வேலையற்று வெட்டி தற்கம் செய்வதற்காக அல்ல.

தேவையற்றதைத் தவிர்த்து அவசியமான செயல்களிலே ஈடுபட்டால் அது அனைவருக்கும் நலன் பயக்கும்.

"நேரம் எவ்வாறு செலவிடப்பட்டது என்று மறுமையில் விசாரிக்கப்படும்" அல்லாஹ்-வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள். வீனான காரியங்களை விட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!

தவறுகளுக்காக உரியவரிடத்திலும் அல்லாஹ்-விடத்திலும் மன்னிப்புக் கேட்டவனாக...

மஅஸ்ஸலாம்

அபு ஈசா

அன்சாரி,  July 8, 2009 3:44 PM  

சொந்த குடும்பத்திற்கு கூட எழுதிவைக்காமல் பொது நலனுக்கும்,அனாதை இல்லத்திற்கும், கல்விக்கும் தன் விலைமதிப்பற்ற சொத்துகளை இலவசமாக தாரை வார்த்த காதிர் முகைதீன் அப்பா வம்சாவளிகள்தான் ரயில்வே மந்திரியைப் பார்த்து அகலரயில் பாதை கேட்கச் சென்றார்கள். வியாபார நோக்கம்மென்றால் முத்துப்பேட்டை முக்கியஸ்தர்கள் தேவையில்லையே! இதற்கான முயற்சியில் இறங்கியிருக்கும் மேற்கண்ட நமதூர் முக்கியஸ்தர்கள் அனைவரும் அல்லாஹ் உதவியுடன் தனித்தனி தொழில்களில் ஈடுபட்டு நல்ல ஆரோக்கியமாகவே இருக்கிறார்கள். ஃபித்னாவையே கடமையாக ஊரில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இம்முயற்சி கொச்சையாகத்தானிருக்கும். இவர்களுக்காக ஒரு ஷிஃபா மருத்துவமனையோ, ஒரு இமாம் ஷாஃபி பள்ளியோ,மருத்துவ முகாமோ, அகல ரயில் பாதையோ கேட்டு/வேண்டி களம் இறங்கியவர்களை கண்டால் விகாரமாகவும், விவகாரமாகவும் தெரியும்.இப்படி பேசிக்கொண்டிருப்பவர்கள் எதையாவது சாதித்துக் காட்டினால் அர்த்தமுண்டு!எதைக் கிழிக்கப்போகிறார்கள் என்று பொருத்திருந்து பார்க்கலாம்.

adirainetwriter September 10, 2009 3:28 PM  

we appreciated the person who are all given the memorandum to the railway minister, sure bye the allah give long live

Anonymous,  September 23, 2009 7:32 AM  

DO NOT MIND THOSE ALL WHO ARE CONSIDERED AS BARKING DOG AT THE BRIGHT SUN. THE PURPOSE MUST BE SERVED. MAY ALLAH BESTOW HIS BLESSINGS FOR OUR TRUTHFUL GOOD ONES OF OUR TOWN.
S. MOHAMED THAMEEM

Post a Comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

About This Blog

  © Blogger template The Business Templates by Ourblogtemplates.com 2008

Back to TOP