வருத்தப்படாத வயோதிகர்கள் சங்கம்

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதைவிட உலகிலேயே மதச்சுதந்திரத்திற்கு பெயர் பெற்ற நாடு என்றால் மிகையாகாது. இந்நாட்டில் வாழும் அனைத்து சமுதாயத்திற்கும் ஏற்றவகையில் அவர்களின் மதக்கோட்பாடுகளை கடைபிடிக்கும் உரிமையை வழங்குகிறது. இங்கு இஸ்லாமியருக்கென்று முஹம்மதன் சட்டமும் உண்டு. இதில் இஸ்லாமிய குடும்பவியல் சட்டம் முதல் சொத்து உரிமை சட்டம் வரை நாமே நமக்கென்றுள்ள இஸ்லாமிய முறைப்படி பின்பற்ற முடியும். இதனை எதிர்த்து பாசிச பாஜக நாடெங்கிலெலும் எல்லோருக்கும் ஒரே சட்டமாய் பொது சிவில் சட்டம் கொண்டுவரவேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறது.

இஸ்லாமிய முறைப்படி இதுபோன்ற திருமணம் போன்றவற்றை நாமே செய்துகொள்ள இந்திய மதச்சுதந்திரம் அனுமதிப்பதால் நமக்கென்று சங்கங்கள் அமைக்கப்பட்டு அங்கு நம்முடைய திருமணம், சொத்து பிரிப்பு போன்றவற்றிற்கு பேசப்பட்டு பதியப்படுகிறது. இது இந்தியா அரசால் முழுதும் அங்கீகரிக்கக்கூடியது.

ஆனால் இஸ்லாமிய முறைப்படி நடக்கவேண்டிய சங்கங்கள் இஸ்லாமிய கொள்கைகளை குழிதோண்டி புதைப்பதோடல்லாமல், மக்களை தானாவே மற்ற சட்ட நடைமுறைகளுக்கு செல்லும்படியாக தூண்டுகிறது. இது பிற்காலத்தில் என்னவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

தற்போதைய காலகட்டத்தில் இதுபோன்ற சங்கங்களில்,
* 'ஆம்பிளை அப்படித்தான் படுப்பான்யா, பொம்பளைதான் பொத்திக்கினு இருக்கனும்' - தலைசிறந்த தலைவரின் தீர்ப்பு
* இங்கு ஏழை விபச்சாரிக்கு ஒரு சட்டம், உடலை விற்கும் பணக்கார விபசாரிக்கு ஒரு சட்டம்.
* குற்றம் செய்தவர்கள் தாங்கள் தான் என்று சபை முன்னிலையிலேயே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தும் கண்டிக்காமை, தண்டனை கொடுக்காதது.
* ஒருதலை பட்சமான, வசதிபடைத்தவர்களுக்காக ஒரவஞ்சனையான கட்டப்பஞ்சாயத்துக்கள்.
* அரசியலை கலந்து சாணியை அள்ளிப்பூசிக்கொள்வது.
* அரசியல் காழ்ப்புணர்ச்சியை எழுதப்படாத சட்டமாக்கி பின்பற்றுவது.
* மார்க்கம் தெரிந்து தேர்ந்த இறையச்சம் உள்ள ஆலிம்களின் தலைமையின்மை.
* பித்அத்கள், வரதட்சனைகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாவோ தெரிந்தும் கண்டிக்காமை, நடவடிக்கை எடுக்காமை.

இன்னும் நிறைய சொல்லலாம். பழமையான சங்கம் பாழடைந்து போய்க்கொண்டிருக்கிறது என்பதைத்தவிர வேறென்ன சொல்ல?
Share:

2 comments:

 1. A.R.MohamedThasthageerJune 26, 2008 at 12:03 AM

  சிங்கன்டா நான் தலைமை கொண்டேன்!
  சங்கம் என் முடிவின் படியே
  அங்கன் உரிப்பினர்கள் என் உறவுகளேஎன் மமதை கொள்ளும் ஒருதலையாய் முடிவெடுக்கும்-தறுதலைகள் மாற வேண்டும்.
  அசிங்கம்,அராஜகம் அரங்கேற- சங்கம் துனைப்புரிந்தால்-
  தலமையை மாற்ற வேண்டும்.
  ஒரு சார் கோசம் போடும் ,வேச தாரிகள் கலயப்படவேண்டும்.
  சன் மார்கம் தெரிந்த,புரிந்த தலைமை வேண்டும்.
  இவையாயும் இல்லாத அசிங்க சங்கம் இருந்தாளென்ன?
  இடிந்தாளென்ன?

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது