2009-11-25

தொகுப்பு வீடுகள் !!

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் 3,000 ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. இவற்றில் 300க்கு மேற்ப ட்ட தொழிலாளர்கள் உப் பளத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் முதல் கட்டமாக இந்திய உப்புத்துறை மூலம் உப்பளத் தொழிலாளர்கள் 22 பேருக்கு அதிராம்பட்டினம் சால்ட்லைன் பகு தியில் உப்புத்துறைக்கு சொந்தமான இடத்தில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு நேற்று திறப்பு விழா நடைபெற்றது.

தொகுப்பு வீடுகளை திறந்து வைத்து உப்பளத் தொழிலாளர்களிடம் வீடு களின் சான்று, சாவி ஆகியவற்றை உப்புத்துறை கண்காணிப்பாளர் மேஸ் தம் வழங்கினார். அதிராம்பட்டினம் சால்ட் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், கட்டுமாவடி சால்ட் இன்ஸ்பெக்டர் கனகராஜ், உப்புத்துறை லைசென்ஸ்தாரர் ராஜேந்திரன், சால்ட் பணியாளர்கள் ராமையா, முத்துசாமி மற்றும் உப்பளத் தொழிலாளர்கள் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

Read more...

2009-11-22

ஹஜ்ஜின் சிறப்புகள்

அமல்களில் சிறந்தது

“செயல்களில் சிறந்தது எது?” என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ்” என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 26

பெண்களின் ஜிஹாத்

அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகின்றோம். எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை. எனினும் (பெண்களுக்கு) சிறந்த ஜிஹாத், பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் தான்” என்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1520

அன்று பிறந்த பாலகர்

“உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனது தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாத பாலகனாக) திரும்புவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1521

சுவனமே பரிசு
“ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை”

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1773

தவிடுபொடியாகும் தவறுகள்
அல்லாஹ் என்னுடைய உள்ளத்தில் இஸ்லாத்தை அருளிய போது நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் நான் உடன்படிக்கை செய்வதற்காக உங்கள் வலது கையை விரியுங்கள்” என்று கூறினேன். அவர்கள் தன் கையை விரித்து எனது கையைப் பிடித்துக் கொண்டு, “அம்ரே! உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “நான் நிபந்தனை விதிக்கப் போகின்றேன்” என்று கூறினேன். “என்ன நிபந்தனை விதிக்கப் போகின்றாய்?” என்று கேட்டார்கள். “எனக்கு மன்னிக்கப்பட வேண்டும்” என்று நான் பதிலளித்தேன். “அம்ரே! நிச்சயமாக இஸ்லாம் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது. நிச்சயமாக ஹிஜ்ரத் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது. நிச்சயமாக ஹஜ் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது என்று உனக்குத் தெரியாதா?” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 173, இப்னுகுஸைமா

சிறப்பு விருந்தினர்
“அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர், ஹஜ் செய்பவர், உம்ரா செய்பவர் ஆகியோர் அல்லாஹ்வின் சிறப்பு விருந்தினர்கள் ஆவர். அவன் அவர்களை அழைத்தான். அவர்கள் பதிலளிக்கின்றனர். அவனிடம் அவர்கள் பிரார்த்தித்தார்கள். அவர்களுக்கு அவன் வழங்கி விடுகின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: இப்னுமாஜா 2884

இஹ்ராமின் போது இறந்தவர் தல்பியா சொல்லி எழுவார்
(இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் அல்லாஹ்வின் தூதருடன் தமது வாகனத்தின் மீதிருந்தார். திடீரென அவர் தனது வாகனத்திலிருந்து கீழே விழுந்து விட்டார். அது அவரது கழுத்தை முறித்து விட்டது. (அவர் இறந்து விட்டார்) அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரது உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரு ஆடைகளால் கஃபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது தலையை மறைக்கவும் வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் தல்பியா சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப் படுவார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 1266, முஸ்லிம் 2092

ரமளானில் ஒரு ஹஜ்
உம்மு ஸினான் என்றழைக்கப்படும் அன்சாரிப் பெண்ணை நோக்கி, “நீ என்னுடன் ஹஜ் செய்வதற்குத் தடையாக அமைந்தது எது?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், “எங்களிடம் தண்ணீர் கொண்டு வருவதற்கான இரண்டே இரண்டு ஒட்டகங்கள் தான் உள்ளன. ஓர் ஒட்டகத்தில் என் கணவரும் மகனும் சென்றுள்ளனர். நாங்கள் (இங்கே தண்ணீர் எடுத்துச்) செல்வதற்காக இன்னோர் ஒட்டகத்தை இங்கே எங்களுக்காக விட்டுச் சென்றிருக்கின்றனர்” என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ரமளான் மாதம் வந்ததும் நீ உம்ரா செய்! ஏனெனில் ரமளானில் உம்ரா செய்வது ஹஜ் செய்வதற்குச் சமமாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 2201
அரஃபா நாள் – மலக்குகளிடம் அல்லாஹ் பெருமிதம்
“பரட்டைத் தலையர்களாக, புழுதி படிந்தவர்களாக நிற்கும் எனது அடியார்களைப் பாருங்கள்” என்று அரஃபா பெருவெளியில் நிற்கும் மக்களைப் பற்றி மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ் மலக்குகளிடம் பெருமிதம் கொள்கின்றான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத் 7702

ஒன்பதாம் நாள் விடுதலை நாள்
அரஃபா நாளை விட வேறெந்த நாளிலும் அல்லாஹ் அடியானை அதிகமாக நரகத்திலிருந்து விடுதலை செய்வதில்லை. (அந்நாளில்) அவன் நெருங்கி வந்து இந்த அடியார்கள் என்னை விரும்புகின்றார்கள் என்று சொல்லி மலக்குகளிடம் பெருமிதம் கொள்கின்றான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 2402

அரஃபா நாளின் துஆவே சிறந்த துஆவாகும்

துஆக்களில் சிறந்தது அரஃபா நாளின் துஆவாகும். நானும் எனக்கு முந்தைய நபிமார்களும் சொன்னதில் சிறந்தது, “லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு ஹுல்ல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்’ ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்(ரலி),

நூல்:திர்மிதி3509

அரஃபா நோன்பு (ஹாஜி அல்லாதோருக்கு)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மாதத்தில் மூன்று (நாட்கள் நோன்பு நோற்பது)ம், ரமளானுக்கு ரமளான் நோன்பு நோற்பதும் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றது போலாகும். அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆஷுரா நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு பாவத்திற்குப் பரிகாரமாக அமையும் என அல்லாஹ்வின் மீது நான் ஆதரவு வைக்கின்றேன்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல்: முஸ்லிம் 1976

சிறியவரின் ஜிஹாத் – ஹஜ்
முதியவர், சிறியவர், பலவீனமானரின் ஜிஹாத் ஹஜ்ஜும் உம்ராவும் ஆகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: நஸயீ 2579

தல்பியாவின் சிறப்பு
எந்த முஸ்லிமாவது தல்பியா கூறினால் அவரது வலப்புறம் மற்றும் இடப்புறம் உள்ள கற்கள், மரங்கள், களிமண் கட்டிகள் யாவும் தல்பியா கூறுகின்றன. இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை பூமி முழுவதும் உள்ளவைகளும் இவ்வாறு தல்பியா கூறுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), நூல்: திர்மிதீ 758

தவாஃபின் சிறப்பு
யார் கஅபாவை வலம் வந்து இரு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவர் ஓர் அடிமையை உரிமை விட்டவர் போலாவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: இப்னுமாஜா 2947

சாட்சி சொல்லும் ஹஜருல் அஸ்வத்

கியாமத் நாளில் பார்க்கும் இரு கண்கள் கொண்டதாகவும் பேசும் நாவுகள் கொண்டதாகவும் ஹஜருல் அஸ்வதை எழுப்புவான். யார் இதை முத்தமிட்டாரோ அவருக்காக அது சாட்சி கூறும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: திர்மிதீ 884

மழித்துக் கொள்பவருக்கு மன்னிப்பு

நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின் போது தலையை மழித்தார்கள். அவர்கள், “இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக!” என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று தோழர்கள் கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள், “இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கிருபை செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று தோழர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், “முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1727

ஜம்ஜமின் சிறப்பு
அது (ஜம்ஜம் நீர்) பரக்கத் செய்யப் பட்டதாகும். உண்ணுபவருக்கு உணவாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: முஸ்லிம் 4520

மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவதன் சிறப்பு

மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது அது அல்லாததில் (மற்ற பள்ளிகளில்) ஒரு லட்சம் தொழுவதை விடச் சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: அஹ்மத் 14167, இப்னுமாஜா 1396

மஸ்ஜிதுந்நபவீயில் தொழுவதன் சிறப்பு

மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட

எனது பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1190

மஸ்ஜிதுல் குபாவில் தொழுவதன் சிறப்பு

யார் தனது வீட்டில் உளூச் செய்து மஸ்ஜிது குபாவுக்கு வந்து அதில் ஒரு தொழுகை தொழுகின்றாரோ அவருக்கு உம்ரா செய்த கூலி உண்டு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஹனீஃப் (ரலி), நூல்: இப்னுமாஜா 1406, நஸயீ 692

Read more...

2009-11-21

மரண அறிவிப்பு

மர்ஹூம் முஹம்மத் தம்பி மரைக்காயர் (கட்ட பிள்ளையார்)அவர்களின் மகனாரும்,சகோதரர்கள் முஹம்மத் தமீம்,சாதிக்,ரபீக்,தௌபீக் ஆகியோர்களின் தகப்பனாரும்,மர்ஹூம் ஷேய்க்காதியார்,மர்ஹூம் அபுல் ஹசன்,அப்துல் ரஜாக்,ஹாஜா அலாவுதீன் ஆகியோர்களின் சகோதரரும்,அப்துல் ரஜாக்,ஷேய்க் அப்துல் காதர்,அப்துல் ரஜாக்,ஹாஜா ஆகியோர்களின் மாமனாருமாகிய நடுத்தெருவில் வசித்து வந்த சாகுல் ஹமீத் அவர்கள் இன்று காலை சுமார் ஆறு மணியளவில் அதிராம்பட்டினத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டார்கள்.அன்னார் அவர்கள் மிக எளிமையான நடத்தையும்,மேன்மையையும் பேணி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அன்னாரின் மறுமை உலக நற் பேருக்காகவும்,ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கம் கிடைக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி துவா செய்யுமாறு வேண்டுகிறோம்.

இப்படிக்கு

கட்டப்பிள்ளையார் குடும்பத்தார்.

Read more...

2009-11-19

அதிரை தைக்கால் தெரு, பிலால் நகரில் வெள்ளம்

வடகிழக்கு பருவமழை, புயல் சின்னம் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களாக நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் திருச்சி, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் கடந்த வாரம் மழை கொட்டி தீர்த்தது. அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.



இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக மழை சிறிது ஓய்வு கொடுத்து இருந்தது. தற்போது நேற்று இரவு முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு லேசான தூறலுடன் ஆரம்பித்த மழை இன்று அதிகாலை கனமழையாக கொட்டியது. தஞ்சாவூரில் இன்று அதிகாலை 5 மணி முதல் கனமழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து கொண்டு உள்ளது. வல்லம் பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. அங்கு 80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.





இதே போல பாபநாசத்திலும் அதிகாலை அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. கும்பகோணம், ஒரத்தநாடு, அதிராம்பட்டினத்திலும் மழை கொட்டியது.

தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

வல்லம் - 80

அணைக்கரை - 48.8

திருக்காட்டுப்பள்ளி - 42

திருவையாறு - 22

தஞ்சை - 18

பூதலூர் - 17.6

அதிராம்பட்டினம் - 12.1

ஒரத்தநாடு - 10.6

பாபநாசம் - 7.2

நெய்வாசல்

தென்பாதி - 5.2

பேராவூரணி - 3.8

வெட்டிகாடு - 1

மொத்தம் 268.30 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. சராசரி 12.78 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது.

நாகை மாவட்டத்தில் மழை ஓய்ந்தது. நேற்று வேதாரண்யத்தில் இரவு பனிப்பொழிவு சற்று அதிகமாக இருந்தது. திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடியில் அதிகாலை இடியுடன் பலத்த மழை பெய்தது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி, சீர்காழியில் மழை இல்லை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியில் மழை பெய்தது. கரூர் மாவட்டத்தில் மழை இல்லை. அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பதிவாகி உள்ளது.



புகைப்படங்கள் : அஹமது ஹசன் -அதிரை
செல்: 9600714719

Read more...

ஹஜ் செய்பவர்கள் குர்பானி கொடுக்க வேண்டுமா? – இதப்படிங்க முதல்ல…

முஸ்லிம்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான ஹஜ் கிரியை 35 லட்சத்திற்கும் மேலதிகமான மக்களால் ஒவ்வொரு ஆண்டும் நிறைவேற்றப்படுகின்றது. இன, மொழி, நாடு, நிற வேறுபாடுகளைக் கடந்து, உலகம் முழுவதிலிருந்தும் ஆண்களும், பெண்களுமாக ஹஜ் கடமையை நிறைவேற்ற, ஒவ்வொரு வருடம் சவூதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்குச் செல்கின்றனர். குறிப்பிட்ட நாட்களில், மக்கா மற்றும் மக்காவை சுற்றியுள்ள சில இடங்களில் தங்கி, சில வணக்க வழிபாடுகளைச் செய்வதே ஹஜ் எனப்படுகின்றது. அவற்றுள், ஓர் ஆட்டையோ அல்லது மாடு, ஒட்டகங்களை கூட்டாகவோ குர்பானி என்ற பெயரில் இறைவனுக்காக பலியிட்டு தேவையுள்ளவர்களுக்கும், ஏழைகளுக்கும் விநியோகிப்பதும் ஒன்றாகும்.

இந்த வருடம், இந்தியாவிலிருந்து 1,60,491 பேர் ஹஜ் செய்ய இருக்கின்றனர். இவர்களுள், 1,15,000 பேர் இந்தியா ஹஜ் கமிட்டி மூலமும், 45,491 பேர் தனியார் ஹஜ் டிராவல்ஸ் மூலமும் மக்கா வர இருக்கின்றனர்.

பல்வேறு நாடுகள், நகரங்களில் இருந்து ஹஜ்ஜுக்கு செல்பவர்கள், பலிப்பிராணிகளை நேரடியாக சென்று வாங்கி, பலி கொடுத்து, விநியோகம் செய்வது இயலாததாகையால், தங்களை ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லும் ஏஜெண்டுகளிடம் அதற்கான தொகைகளை ஒப்படைப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், பெரும்பாலான ஏஜண்டுகள் அந்த தொகைகளை ஏப்பம் விட்டு விடுகின்றார்கள் என்பது நிதர்சனமான அதே நேரம் கசப்பான உண்மை. பேருக்கு சில ஆடுகளை பலியிட்டு, அந்த இறைச்சியை ஹஜ் செய்பவர்களுக்கு உணவாக வழங்குகின்றனர். மீதத் தொகை, ஏஜண்டுகள் மற்றும் குர்பானி விநியோகம் செய்பவர்களிடையே பங்கிடப்படுகின்றது. இதை அறியாத ஹாஜிகள் தங்களின் பணத்தைக் கொண்டு, குர்பானி கொடுக்கப்பட்டு விட்டதாக எண்ணி ஏமாந்த வண்ணம் உள்ளனர். மேலும், பல மக்களை கூட்டிச் செல்லும் ஹஜ் ஏஜெண்டுகள், தங்கள் கூடாரங்களில் உணவுத் தேவைக்கு இறைச்சி தேவைப்படுவதால், அரசாங்கம் மூலம் குர்பானி கொடுக்க விரும்புவர்களையும் அவ்வாறு கொடுக்க விடுவதில்லை. குர்பானி இறைச்சியை கண்டிப்பாக ஹாஜிகள் சாப்பிட வேண்டும் என பொய்யான மார்க்கத் தீர்ப்பைக்(!) கூறி, தடுக்கின்றனர். மேலும், தங்கள் மூலம் கொடுத்தால் குறைந்த விலையில் குர்பானி கொடுக்கலாம் எனவும் ஆசை காட்டுகின்றனர்.

மேலும், இவ்வாறு தனியார் மூலம் அறுக்கப்படும் பலிப்பிராணிகள் சுத்தமான இடத்தில் வைத்து அறுக்கப்படுவதில்லை; அறுக்கப்பட்ட பிராணிகளின் இறைச்சியும் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை.

இந்நிலையை களையும் பொருட்டு, சவூதி அரசானது, ஹஜ் இறைச்சி உபயோகத்திற்கான சவூதி திட்டம் (Saudi Project for Utilization of Haj Meat SPUHM) – என்ற பெயரில் மக்காவைச் சுற்றி பல பகுதிகளில், பலிக்கூடங்களை நிறுவியுள்ளது. ஹாஜிகளின் சார்பில் குர்பானி கொடுக்க சவூதி அரசால் அங்கீகாரம் பெற்ற ஒரே அமைப்பு இதுவே. பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்யும் இக்கூடங்களில், ஒரு நாளைக்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பலிப்பிராணிகளை – இஸ்லாமிய முறைப்படி பலியிட்டு, சுகாதாரமாகவும், இறைச்சிகளை வீணாக்காமலும் விநியோகிக்க முடியும். இஸ்லாமிய வளர்ச்சி வங்கி (IDB) – இன் மேற்பார்வையில் நடைபெறும் இந்த ஏற்பாடு, ஹஜ் செல்லும் பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. எண்ணிக்கைக்கும், எடைக்கும், நியாயமான விநியோகத்திற்கும் IDB உத்தரவாதம் அளிக்கின்றது.

சவூதியில் உள்ள பிற நகரங்களில் இருந்து வருபவர்களும், வெளிநாடுகளில் இருந்து ஹஜ் செய்ய வருபவர்களும், சவூதியில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் கிடைக்கக் கூடிய SR 430 மதிப்பிலான கூப்பன்களை பெற்றுக் கொள்ளலாம். ஹாஜிகளின் சார்பாக IDB மூலம் குர்பானி கொடுக்கப்பட்டு, இறைச்சியானது தரை-கடல்-வான் மார்க்கமாக மக்கா, மதீனா மற்றும் சவூதியின் பிற நகரங்களில் உள்ள ஏழைகளுக்கும், மேலும் 25 -க்கும் அதிகமான நாடுகளில் உள்ள ஏழை மக்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்படுகின்றது. இதன் மூலம், ஹாஜிகள் தங்கள் கடமையை சரியாக இறைவழியில் நிறைவேற்றிய திருப்தி கிடைக்கும். மேலும், ஏஜெண்டுகளிடம் ஏமாறாமல், தேவையுள்ளோருக்கு குர்பானி இறைச்சியும் சென்றடையும்.

tntj.net

Read more...

About This Blog

  © Blogger template The Business Templates by Ourblogtemplates.com 2008

Back to TOP